போதைப்பொருள் விழிப்புணர்வு
பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 28.08.2024 அன்று போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அரூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.எஸ்.சரவணன் அவர்கள் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போதைப்பொருளால் விளையும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமையாசிரியர் (மேல்நிலை) திரு.கி.சங்கரன் அவர்கள் போதைப்பொருள்களின் தீய விளைவுகள் குறித்து விளக்கிக்கூறினார். பள்ளி ஆசிரியர்கள் திரு.கே.ஆர்.சுதாகர் (முதுகலை) , திரு.சம்பத்குமார் (முதுகலை), திரு.விஜயபாலாஜி (முதுகலை), திரு.கிருஷ்ணமூர்த்தி (முதுகலை), திரு.அண்ணாதுரை (ஓவியம்), திரு.எஸ்.இளமுருகன்(பட்டதாராஆசிரியர்) ஆகியோர் உடனிருந்தனர்.


No comments:
Post a Comment