S LOKESH 7.5% GOVERNMENT SCHEME OMANDURAR MEDICAL COLLEGE ...
Government Boys Higher Secondary School ,Periyampatti
Wednesday, 28 August 2024
பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு
போதைப்பொருள் விழிப்புணர்வு
Tuesday, 27 August 2024
பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு தேர்தல்
பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு தேர்தல்
பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2024 ஆம் ஆண்டுக்கான பள்ளி மேலாண்மைக்குழு தேர்தல் 24.08.2024 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் திரு.அ.திருமால், தலைமை வகிக்க , உதவிதலைமையாசிரியர் (மேல்நிலை) திரு.கி.சங்கரன் வரவேற்றார். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் திரு. சின்னமாது அவர்கள், மற்றும் காரிமங்கலம் வட்டார கல்வி அலுவலர் திரு.இராஜ்குமார் ஆகியோர்
முன்னிலை வகிக்க கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பனர். இக்கூட்டத்தில் ஊராட்சித்தலைவர் ஜெயலட்சுமி சங்கர், பெற்றோர் ஆசிரியர் கழக துணைதலைவர் திரு அறிவழகன் ஊராட்சி துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மற்று இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் பள்ளியின் பட்டதாரி தமிழாசிரியையும் பள்ளி மேலாண்மைகுழு ஆசிரிய பிரதிநிதியுமான திருமதி. மா.அருள்மொழி நன்றியுரை வழங்கினார்.
Thursday, 15 August 2024
பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 78 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 78 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 78 வது சுதந்திர தின விழா 15.08.2024 அன்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் திரு.அ திருமால் தலைமை தாங்கி தேசியகொடியினை ஏற்றினார். உதவி தலைமையாசிரியர் திரு.கி.சங்கரன் வரவேற்புரை வழங்கினார். பள்ளியில் ஆண்டுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பரிசுகள் வழங்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதத்தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவருக்கு கணித ஆசிரியை திருமதி சோ.அ.சாந்தி வெகுமதி வழங்கினார். இப்பள்ளியின் முன்னாள் தமிழாசிரியர் திரு.பழனிசாமி அவர்களால் நல்லொழுக்க மாணவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு.மனோகரன், துணைத்தலைவர் அறிவழகன், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நடேசன் மற்றும் பொதுமக்கள் , மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியினை பள்ளியின் பட்டதாரி தமிழாசிரியை திருமதி.மா.அருள்மொழி தொகுத்து வழங்கினார். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளியின் உதவி தலைமையாசிரியர்(இடைநிலை) திரு.மே.ஜெகதீசன் அவர்கள் நன்றியுரை வழங்க, முடிவில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு நிகழ்ச்சியானது இனிதே நிறைவு பெற்றது
Monday, 12 August 2024
போதைப்பொருளுக்கு எதிரான போதை எதிர்ப்பு உறுதிமொழி, நாள் 12.08.2024
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
பெரியாம்பட்டி
பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருளுக்கு எதிரான போதை எதிர்ப்பு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி 12.08.2024 அன்று நடைபெற்றது.விழிப்புணர்வு பேரணியை தலைமையாசிரியர் திரு.அ.திருமால் அவர்கள் துவங்கி வைத்தார். பள்ளியின் உதவி தலைமையாசிரியர் (மேல்நிலை) திரு.கி.சங்கரன் அவர்கள் மேற்பார்வையில் பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி புல்லுக்குறிச்சி, பெரியாம்பட்டி பிரதான சாலை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வரை விழிப்புணர்வு பேரணி சென்றனர். பள்ளியின் ஆசிரியர்கள் திரு.விஜயபாலாஜி மு.க.ஆ (இயற்பியல்) திரு.செ.இளமுருகன், ப.ஆ (அறிவியல்), திரு.மா.செந்தில்குமார் ப.ஆ (அறிவியல்), திரு.மு.முருகேசன்,ப.ஆ (கணிதம்), திருமதி.த.பொற்செல்வி ,ப.ஆ(தமிழ்), திருமதி.மா.அருள்மொழி ப.ஆ (தமிழ்), திரு.கோ.அண்ணாதுரை , ஓவிய ஆசிரியர், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர், திரு. .தம்பிதுரை, பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர், திரு.எம்.செந்தில், பகுதிநேர கைத்தொழில் ஆசிரியை திருமதி ரேவதி ஆகியோர் மாணவர் பாதுகாப்பிற்கு உடன் சென்றனர்.
உறுதிமொழியினை பள்ளியின் உதவி தலைமையாசிரியர் (மேல்நிலை) திரு.கி.சங்கரன் அவர்கள் படிக்க மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
S LOKESH 7.5% GOVERNMENT SCHEME OMANDURAR MEDICAL COLLEGE ...
-
பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 78 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம் பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 78 வது...
-
போதைப்பொருள் விழிப்புணர்வு பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 28.08.2024 அன்று போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்...
-
பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , காரிமங்கலம் வட்டம் தருமபுரி மாவட்டம் .










