அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
பெரியாம்பட்டி
பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருளுக்கு எதிரான போதை எதிர்ப்பு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி 12.08.2024 அன்று நடைபெற்றது.விழிப்புணர்வு பேரணியை தலைமையாசிரியர் திரு.அ.திருமால் அவர்கள் துவங்கி வைத்தார். பள்ளியின் உதவி தலைமையாசிரியர் (மேல்நிலை) திரு.கி.சங்கரன் அவர்கள் மேற்பார்வையில் பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி புல்லுக்குறிச்சி, பெரியாம்பட்டி பிரதான சாலை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வரை விழிப்புணர்வு பேரணி சென்றனர். பள்ளியின் ஆசிரியர்கள் திரு.விஜயபாலாஜி மு.க.ஆ (இயற்பியல்) திரு.செ.இளமுருகன், ப.ஆ (அறிவியல்), திரு.மா.செந்தில்குமார் ப.ஆ (அறிவியல்), திரு.மு.முருகேசன்,ப.ஆ (கணிதம்), திருமதி.த.பொற்செல்வி ,ப.ஆ(தமிழ்), திருமதி.மா.அருள்மொழி ப.ஆ (தமிழ்), திரு.கோ.அண்ணாதுரை , ஓவிய ஆசிரியர், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர், திரு. .தம்பிதுரை, பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர், திரு.எம்.செந்தில், பகுதிநேர கைத்தொழில் ஆசிரியை திருமதி ரேவதி ஆகியோர் மாணவர் பாதுகாப்பிற்கு உடன் சென்றனர்.
உறுதிமொழியினை பள்ளியின் உதவி தலைமையாசிரியர் (மேல்நிலை) திரு.கி.சங்கரன் அவர்கள் படிக்க மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.


No comments:
Post a Comment