Thursday, 15 August 2024

பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 78 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 78 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

    பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 78 வது சுதந்திர தின விழா 15.08.2024 அன்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் திரு.அ திருமால் தலைமை தாங்கி தேசியகொடியினை ஏற்றினார். உதவி தலைமையாசிரியர் திரு.கி.சங்கரன் வரவேற்புரை வழங்கினார். பள்ளியில் ஆண்டுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பரிசுகள் வழங்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதத்தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவருக்கு கணித ஆசிரியை திருமதி சோ.அ.சாந்தி வெகுமதி வழங்கினார். இப்பள்ளியின் முன்னாள் தமிழாசிரியர் திரு.பழனிசாமி அவர்களால் நல்லொழுக்க மாணவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.  இந்நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு.மனோகரன், துணைத்தலைவர் அறிவழகன், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நடேசன் மற்றும் பொதுமக்கள் , மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியினை பள்ளியின் பட்டதாரி தமிழாசிரியை திருமதி.மா.அருள்மொழி தொகுத்து வழங்கினார். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளியின் உதவி தலைமையாசிரியர்(இடைநிலை) திரு.மே.ஜெகதீசன் அவர்கள் நன்றியுரை வழங்க, முடிவில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு நிகழ்ச்சியானது இனிதே நிறைவு பெற்றது











No comments:

Post a Comment

 S LOKESH 7.5% GOVERNMENT SCHEME  OMANDURAR MEDICAL COLLEGE ...